கைதுசெய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்டினென்ட் கொமாண்டர்சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை எதிர்வரும்,29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழ்இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற்போகசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா காவற்துறையால் தேடப்பட்டு வந்த சந்தன பிரசாத்ஹெட்டியாராச்சிகுற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலும் சில அதிர்ச்சிகரமானசெய்திகள் வந்துள்ளன.
பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை அதிவேக டோராப் படகு ஒன்றின் மூலம் நாட்டைவிட்டுதப்பிச்செல்ல சிறிலங்காவின் தற்போதைய முப்படை கட்டளை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ணாமுன்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை டோரா படகு ஒன்றின் மூலம் இலங்கைகடல் எல்லைவரை கொண்டுசென்று விடுவதற்கு ரவீந்திர விஜயகுணரட்ணா முயற்சித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.