Loading...
இலங்கையின் கிழக்கே திருகோணமலையின் கடற்கரையோரமாக அசாதாரண நிலைமை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
வழமைக்கு மாறாக கடல் அலைகள் அதிக உயரத்தில் எழுந்து அடிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக உப்புவெளி, புல்மோட்டை, மூதூர், கிண்ணியா போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் மக்க தெரிவிக்கின்றனர்.
Loading...
இந்த நிலையில் உட்துறைமுகப் பகுதியினூடாக செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று இலங்கையைச் சுற்றிக் காணப்படும் கடற்கரையோரங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Loading...