Loading...
அட்டக்கத்தியில் அறிமுகமாகி இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக மனதில் பதிந்தவர் நந்திதா.
இவர் முண்டாசுப்பட்டி, அஞ்சல, புலி என பல படங்களில் நடித்துள்ள இவர் நர்மதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாகி, அந்தக் குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க போராடுகிற கதை. இதில் நர்மதா என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். பள்ளி மாணவி, கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என 3 விதமாக தோற்றத்தில் நடிக்கிறார்.
Loading...
அவருடன் விஜய் வசந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத் இயக்குகிறார். இதுவரை பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்து வந்த நந்திதாவுக்கு இந்தப் படம் இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும் என்கிறார்கள்.
Loading...