முச்சக்கர வண்டியின் சிறப்பு அனுமதியை பெற விண்ணப்பிக்கும் ஒவ்வருவரும் 35 வயதிற்கு குறைவாகவும், 70 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், பொது சேவை முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான விசேட உத்தரவுகள் பல போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவின் கையெழுத்துடன் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரை நாயகத்தினால் இந்த பணிகளுக்காக வாகன அனுமதி பாத்திரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விசேட ஏற்பு இசைவுகளின் படி விசேட பரிந்துரைகள் தவிர்ந்த அதன் உத்தரவுக்காக எந்தவொரு நபரினாலும் பொது சேவை முச்சக்கர வண்டி செலுத்த முடியாது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சிறப்பு அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் ஒவ்வருவரும் 35 வயதிற்கு குறைவானதாகவும் 70 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான சாரதி அனுமதி பாத்திரத்தை பெற்ற பின்னர் ஆக குறைந்தது 2 வருட காலத்துக்கு வாகனத்தை செலுத்துவதற்கான அனுபவம் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்பு இசைவுகளுக்காக பெற்றுக்கொள்ளும் வைத்திய சான்றிதழ், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்படும் பயிற்சிக்கான கற்கைநெறி ஒன்று அல்லது ஆணையாளர் நாயகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தின் ஒன்றினால் அனுமதிக்கப்பட்ட கற்கை நெறிக்கான சான்றிதழ், நாட்டின் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிக்கான பதிவு இல்லாமையை உறுதி செய்யும் பொலிஸ் அறிக்கை மற்றும் 2000 கட்டணத்துடன் அதனை மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்துடன் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.