16.08.2018 வியாழக்கிழமை இன்றைய ராசி பலன்கள் விளம்பி வருடம், ஆடி மாதம் 31ம் திகதி, துல்ஹஜ் 4ம் திகதி, 16.8.18 வியாழக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி காலை 7:19 வரை; அதன் பின் சஷ்டி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 9:38 வரை;
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : சஷ்டி விரதம், முருகன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.
மேஷம்:
நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சி பெறும்.
உபரி பணவரவை தகுந்த சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்:
உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும்.
சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டாகும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும்.
மிதுனம்:
முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் முழுஈடுபாடு செலுத்தவும்.
லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
கடகம்:
சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகம் பணிபுரிய நேரிடலாம்.
பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு உண்ணவும்.
சிம்மம்:
நண்பரின் உதவி கண்டு பெருமை கொள்வீர்கள். செயலில் புத்துணர்ச்சி வெளிப்படும்.
தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்துவீர்கள். நிலுவைப் பணம் கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழலாம்.
கன்னி:
அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தொந்தரவை சந்திக்கலாம்.
லாபம் மிதமாக இருக்கும். தேவைக்கு மட்டும் செலவு செய்வது நல்லது. இஷ்ட தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.
துலாம்:
வாழ்வில் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும்.
பெண்கள் தாய் வீட்டாரின் தேவையறிந்து உதவுவர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.
விருச்சிகம்:
பணிகளை திறம்பட செய்தால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும்.
கூடுதல் முயற்சியால் நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
தனுசு:
திறமைகளை வளர்த்து கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றி பெறும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும்.
பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.
மகரம்:
அவமதிதவர் அன்பு பாராட்டுகிற நல்ல நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும்.
பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் புத்தாடை, ஆபரணம் பெற நல்யோகம் உண்டு.
கும்பம்:
மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றலாம். தொழில் வியாபார வகையில் பொறுப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் ஓரளவு கிடைக்கும்.
அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.
மீனம்:
சிலரது பேச்சால் சங்கடம் வரலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். லாபம் சுமார்.
திடீர் செலவால் சேமிப்பு கரையும். அரசியல்வாதிகள் விவகாரங்களில் இதமான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது.