முரளிதரன் காசி விசுவநாதன் அவர்களது முகநூல் பதிவு:
“சாவர்க்கர் பிறவியிலேயே ஹீரோ, விளைவை எண்ணிப் பயந்து கடமையைச் செய்யத் தவறுபவர்களை அவரால் சகிக்க முடியாது. இவ்வகையான அரசு தவறானதென்று அவர் சரியாகவோ, தவறாகவோ முடிவெடுத்துவிட்டால் அவ்வளவுதான், அந்தத் தீமையை அழித்தொழிப்பதற்கான வழிகளை வகுக்க அவர் தயங்கவே மாட்டார்.”
சாவர்க்கரின் இளமைக்கால வாழ்வைச் சொல்லும் Life of Barrister Savarkar என்ற புத்தகத்தில் வரும் வரிகள் இவை. சாவர்க்கரைப் புகழ்ந்து இப்படி அந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பவர், அந்த நூலின் ஆசிரியரான சித்திரகுப்தர்.
சித்திரகுப்தர் எழுதிய இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1926ல் வெளியானது. அவருடைய தீரத்தையும் துணிச்சலையும் வெகுவாகப் புகழ்ந்திருந்தார் நூலாசிரியர் சித்திரகுப்தர். 1930களிலும் இந்தப் புத்தகத்தின் மறுபதிப்பு வெளியானது. அதன் பிறகு 1987ல் சவார்கரின் நூல்களை வெளியிடும் வீர் சாவர்க்கர் பிரகாஷன் அந்தப் புத்தகத்தை வெளியிட்டது.
அந்தப் பதிப்பில்தான் முதன் முறையாக சித்திரகுப்தர் யார் என்ற ரகசியம் வெளியிடப்பட்டது. அவர் வேறு யாருமல்ல, நம்ம சாவர்க்கர்தான். அதாவது அவரே அவரைப் புகழ்ந்து புத்தகம் எழுதி, அதைப் புனைப்பெயரில் வெளியிட்டுக்கொண்டார்.
சாவர்க்கர் “மகத்தான காரியங்களைச் சாதிக்க ஏதுவான, உடனடியாக முடிவெடுக்கும் மனம், வெல்ல முடியாத தீரம், தோற்கடிக்க முடியாத தன்னம்பிக்கை ஆகிய மிக அரிய குணங்கள் அவரிடம் இருந்தன.” என்று அவரைப் பற்றி அவரே எழுதிக்கொண்டவர், “அவருடைய துணச்சலை யார்தான் வியக்காமல் இருக்க முடியும்?” என்றும் தன்னைத் தானே பாராட்டிக்கொள்கிறார்.
புத்தகத்தின் இணைப்பு: