Loading...
நடிகை அமலாபால் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார். இந்த நிலையில் இவருடைய அடுத்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமலாபால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘ஆடை’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கவுள்ளார்.
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படம் ஒரு த்ரில் ஆக்சன் படம் என்றும், இந்த படத்தின் கேரக்டர் போன்று அமலாபால் இதுவரை தனது திரையுலக வாழ்க்கையில் நடித்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
Loading...
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவலுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
Loading...