தற்போதுள்ள கரன்சி சந்தையின் நிலையற்ற தன்மையை சமாளிக்க போதுமான அளவு அன்னிய செலாவணி நாட்டில் உள்ளது என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வள நாடான துருக்கி மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் துருக்கியின் பணமான லிராவின் மதிப்பு மிகவும் சரிந்தது. இதனால் பல நாடுகளின் பணமதிப்பு மிகவும் பாதிப்படைந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து அமெரிக்க டாலருக்கு நிகராக ரு.70.09 ஆக குறைந்தது.
இதனால் நாட்டில் அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்படலாம் என பலரும் கவலை தெரிவித்தனர். ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 402.7 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது சென்ற வார கையிருப்பை விட 1.49 பில்லியன் அமெரிக்க டாலர் குறைவாகும்.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “தற்போது சர்வ தேச கரன்சி சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிற்து. இந்த கரன்சி சந்தையில் ஏற்படும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதனால் இந்த நிலையற்ற தன்மையை சமாளிக்க போதுமான அளவு அன்னிய செலாவணியை கையிருப்பில் வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.