திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.
அன்றைய நாளிலிருந்தே கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள், பல்வேறு தலைவர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அமைதி பேரணி, நினைவேந்தல் நிகழ்வுகளும் நடந்து வருகின்றது.
தொடர்ந்து அவரது நகைச்சுவை பேச்சுகள், பயன்படுத்திய புத்தகங்கள், உடைமைகள் பற்றியும் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
அவர் இறந்த அன்றைய தினமே தனியாக நிற்கும் அவரது நாற்காலியின் புகைப்படம் வெளியானது.
இந்நிலையில் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலை தாங்கிக் கொண்டிருந்த சாய்வு பெட்டி, கேட்பாரற்று ஒரு ஓரத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
எத்தனையோ தலைவர்கள் தொட்டு வணங்கிய அந்த பெட்டி. எத்தனையோ மக்கள் தொட்டுவிட வேண்டும் என முயற்சி செய்த அந்த பெட்டி, ஒரு ஓரத்தில் வீசப்பட்டு கிடக்கிறதாம்.