Loading...
திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணமான பெண் மீது காதல் கொண்ட வாலிபர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
முருகராஜ் என்ற வாலிபருக்கு திருமணமாகவில்லை. இவர், அதே பகுதியை சேர்ந்த திருமணமான திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு அப்பெண்ணின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற அன்று, இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பெண்ணின் உறவினர்கள் பார்த்து சத்தம் போட்டனர். மேலும் இது குறித்து முருகராஜின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடமும் தெரிவித்தனர்.
Loading...
இதில் அவமானம் அடைந்த முருகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Loading...