தமிழகத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரம் ஏதேனும் இருக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்(28). துணி வியாபாரியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேப்பகுதியை சேர்ந்த ஒருவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி, பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை நடைபெற்ற சில மாதங்கள் கடந்த நிலையில், ஸ்ரீதர், நேற்று திருவொற்றியூர் கரிமேடு அருகே இருக்கும் முட்புதரில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
அதாவது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவரது உடலில் லுங்கி, பனியன் மட்டுமே இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைப்பு வைத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஸ்ரீதர் தினமும் குடித்துவிட்டு வந்து பலரிடம் தகராறு செய்திருப்பதாகவும், இதனால் அவர் மீது பலர் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் சில மாதங்களுக்கு முன்பு கள்ளத் தொடர்பு விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், அதன் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.