நடிகர் அஜீத் அடிப்படையிலேயே சிறந்த திறமைசாலி. தொழில்நுட்பம் மீது அதிக காதல் உடையவர். சென்னை எம்ஐடி தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் குழு, தக்ஷா என்ற பெயரில் ஒரு போட்டியில் கலந்து கொள்ள போவதாக நடிகர் அஜீத்க்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் நடக்கிறது. மொத்தம் 55 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன.
தக்ஷாவும் கலந்து கொள்ள போகிறது. போட்டி என்னவென்றால், ஆள் இல்லா குட்டி விமானம் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒருவரின் ரத்த மாதிரியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இதுதான் அந்த போட்டி.
அதுமட்டுமல்ல, இந்த ஆள் இல்லா குட்டி விமானத்தின் பயன் என்ன தெரியுமா? பல பேரின் உயிரை விரைவாக காப்பாற்ற முடியும்.
எப்படி என்றால் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல சாலை வழியே சென்றால் மணிக்கணக்காகும். ஆனால் ஆளில்லா விமானம் மூலம் 10 அல்லது 20 நிமிடத்திலேயே கொண்டு செல்லலாம் என கூறப்படுகிறது.
அதனை ஏற்ற நிர்வாகமும்,முறைப்படி விண்ணப்பித்து சேர்த்து கொள்கிறோம். உங்களுக்கு என்ன சம்பளம் வேண்டும்” என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அஜீத், “எனக்கு சம்பளமே வேண்டாம். அப்படி எனக்கு சம்பளம் தர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதை ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக கொடுத்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பயிற்சியையும் சளைக்காமல், சலிக்காமல் வழங்கி வருகிறார்.
அஜீத் ஆலோசகராக இருக்கும் இந்த தக்ஷா குழுவிற்குதான் இன்று விருது கிடைத்துள்ளது. அதுவும் நடப்பாண்டுக்கான “அப்துல் கலாம் விருது”. இதனால் எம்ஐடி மாணவர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதைவிட உச்சக்கட்ட குஷியில் கொண்டாட்டமாக உள்ளனர் நம்ம தல ரசிகர்கள்.