சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகனைக் காப்பாற்ற தாய் மற்றும் தந்தை இருவரும் போராடி வரும் நிகழ்வு, கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் Li Junyang. மூன்று வயதான இந்த சிறுவன் அரிய வகை புற்றுநோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டு மார்பக அறுவை சிகிச்சை, ஏழு கதிரியக்க சிகிச்சை மற்றும் ஏழு கீமோதெரபி சிகிச்சை போன்றவைகள் மேற்கொள்ளவுள்ளன.
இதனால் இவரின் பெற்றோர் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணங்கள் மற்றும் கடன் வாங்கி அனைத்தையும் சிகிச்சைக்காக செலவு செய்துள்ளனர்.
இருப்பினும் சிறுவனின் சிகிச்சைக்கு £51,000 தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால், பெற்றோர் மற்றவரின் உதவியை நாடியுள்ளனர்.
மகனின் சிகிச்சைக்காக உறவினர்களிடம் போதுமான அளவு கடன் வாங்கிவிட்டதால், அவர்கள் வேறு யாரிடம் பணம் கேட்க முடியாமல் தவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்கள் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெற்றோர் இருவருமே வேலையை விட்டுள்ளனர்.
ஏனெனில் மகன் அருகில் இருக்க வேண்டும், இந்த மருத்துவமனையிலிருந்து, வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அவர்களால் சரிவர வேலை செய்ய முடியவில்லை.
இது குறித்து Dahe தொண்டு நிறுவனத்தின் நிறுவனர், Li Junyang மற்றும் அவரின் தாயாரான Qu Lifang அழுவது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சிறுவனின் தாயார் எங்களுக்கு எந்த ஒரு வழியும் இல்லை, என்னுடைய கணவர் தினமும் பணத்திற்காக ஓடிக் கொண்டிருக்கிறார் என்று அழுதுள்ளார்.
அப்போது அம்மா அழுவதைக் கண்ட Li Junyang அழாதே அம்மா என்று கண்ணீரை அழுது கொண்டே துடைத்துள்ளான்.
இதையடுத்து இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளனர். சிறுவனுக்காக தொண்டு நிறுவனம் சார்பில் அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டிருந்தால், அதில் சிறுவனின் சிகிச்சைக்கு தேவையான 51,465 பவுண்ட் கிடைத்துள்ளது.
அதன் பின் கடந்த 3-ஆம் திகதி சிறுவனுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறுவன் மெதுவாக முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜுலை மாதம் சிறுவனுக்கு காலில் திடீரென்று வலி ஏற்பட்டதால், அவனுடைய எலும்புகளிலும் தற்போது புற்றுநோய் தாக்கியுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.