தனது மனைவி கிராமத்திலுள்ள 20 நபர்களுடன் தொடர்புள்ளதனால் அவளுடன் குடும்பம் நடத்த முடியாதென 69 வயதான கணவன், 64 வயதான மனைவி குறித்து உகன பொலிசில் புகார் செய்துள்ளார்.
ஏழு பிள்ளைகளின் தாயான 64 வயதுடைய தனது மனைவி, கிராமத்தில் உள்ள 20 நபர்களுடன் கள்ளத் தொடர்பு கொண்டுள்ளதால், இனிமேலும் அவளுடன் குடும்பம் நடத்த முடியாது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புகாரில் குறிப்படபட்டுள்ளதாவது,
தான் தனது வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் தனது மனைவி தனது கள்ளக் காதலர்களை வீட்டிற்கு வரவழைப்பதாகவும், பலமுறை தான் இதனை நேரில் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனாலும் சட்டத்தின் மேல் இருக்கும் பயத்தினால் ஒருவரையும் தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் இவ்வாறான கள்ளத் தொடர்புகள் 20 பேரை தான் கையும் களவுமாக பிடித்துள்ளதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வயதை கருத்திற் கொண்டாவது இவ்வாறான தவறுகளை தவிர்க்க எவ்வளவோ அறிவுறுத்தினாலும், இவள் இதனை பொருட்படுத்துவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 1990 ஆம் ஆண்டில் தனது 14 வயதுடைய மகள் ஒருவர் தனது தாயின் தகாத நடத்தையை கண்டு பொறுக்க முடியாது, தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
பொலிஸார் இந்த நபரின் மனைவியிடம் விசாரணை நடத்திய போது, மனைவி கணவனை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தனது கணவன் தன்னை எப்போதும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், தங்களின் மகள் தற்கொலை செய்துகொண்டது உண்மை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இந்த தம்பதிகளை அழைத்து மதத்திற்கு எற்ப நடந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளார்.