அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு வழங்கப்பட்ட மேலதிக வாகனங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன
ஜனாதிபதி செயலாளரின் சுற்றறிக்கையின் படி அமைச்சர் ஒருவரின் பராமரிப்பு மாற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு அதிகபட்சமாக மூன்று வாகனங்களே ஒதுக்கப்பட வேண்டும்.
எனினும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மேலதிகமாக 7 வாகங்களும் 8 ஓட்டுனர்களும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சருக்கு வழங்கப்பட்ட வாகங்கள் CAV/CAE/PF/PH/KY/KG/ எனும் ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பமாகும் வாகனங்கள் ஆகும். அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்)T.D.P. பெரேராவின் கையொப்பத்திலேயே இவை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றுக்கு மேல் மாகாணத்தில் பெற்றோல் 600 லீற்றரும், மற்ற மாகாணங்களில் பெற்றோல் 700 லீற்றரும் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.
மேலும் டீசல் வாகனங்களுக்காக மேல் மாகாணத்தில் டீசல் 600 லீற்றரும், மற்ற மாகாணங்களில் டீசல் 500 லீற்றரும் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது