அழகான பெண்ணொருவரை மணமுடிப்பதாக வாக்குறுதி கொடுத்து, அந்தப் பெண்ணை அழைத்து வந்து வேறொருட்டுவருக்கு பணத்திற்காக விற்பனை செய்த போதை பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் கைது செய்யப்பள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையான ஹொரணை பிரதேசத்தில் வசித்த குறித்த நபர், 19 வயதான அழகிய பெண் ஒருவரை இரண்டு வருடங்களாக மணமுடிக்காது தனது மனைவி போன்று வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த பெண்ணை பல நபர்களுக்கு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்து கிடைத்த பணத்தில் ஹெரொயின் போதைப்பொருளை கொள்வனவு செய்துள்ளார்.
ஹெரொயின் போதைப்பொருளுக்கு அடிமையான இந்த நபரை சீதுவை பொலிஸார் அவசர தேடல் நடவடிக்கையின் போது, கைது செய்துள்ளனர்.
இந்த நபரை கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 1116 மில்லிக்கிராம் ஹெரொயின் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு வருடங்களுகு முன்னர் மாவனெல்ல பிரதேசத்தில் இருந்த போது, 17 வயதான அழகான பெண்ணொருவரை மணமுடிப்பதாக வாக்குறுதியளித்து சீதுவ பிரதேசத்துக்கு அழைத்துச் சென்று தற்காலிகமாக குடியேறிய நிலையில் குறித்த பெண்ணை பல நபர்களுக்கு விற்றுள்ளார்.
இவ்வாறு கிடைக்கும் பணத்தில் ஹெரொயின் கொண்டுவந்து அரைவாசியை விற்பனை செய்துள்ளதுடன், ஏனையவற்றை தானும் பாவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் முன் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.