விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் எத்தகைய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துமோ அத்தகைய எதிர்ப்பார்ப்பை நயந்தாராவின் படங்களும் ஏற்படுத்துகின்றன. அதிலும் ‘அறம்’ படத்திற்கு பிறகு நயந்தாராவின் படங்கள் என்றாலே எப்போது ரிலீஸ்? என்று கேள்வி அனைத்து ரசிகர்களிடமும் ஏற்பட்டு விடுகிறது.
இந்த நிலையில், நயந்தாராவின் நடிப்பில் உருவகையுள்ள ‘கோலமாவு கோகிலா’ நயந்தாரா நடித்த படங்களிலேயே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக மட்டும் இன்றி, மிகப்பெரிய ஓபனிங் உள்ள படமாகவும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திகில் படமா?, த்ரில்லர் படமா? காமெடி படமா? குடும்ப படமா? என்று ரசிகர்கள் மனதில் பலவித கேள்விகளை எழுப்பியுள்ள இப்படம் நாளை (ஆகஸ்ட் 17) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
மேலும், இப்படத்தில் இடம்பெறும் கல்யாண வயசு பாடலும், அதில் யோகி பாபு நயந்தாராவை ஒரு தலையாக காதலிப்பதும் படத்தை இன்னும் வைரலாக்கியுள்ளது. இதற்கிடையே, யோகி பாபுவின் காதலை நயந்தாரா ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியை பல திரைப்பட நிகழ்ச்சிகளில் விவாதித்து வருகிறார்கள்.
இது குறித்து இப்படத்தின் இயக்குநர் நெல்சனிடம் கேட்டதற்கு, “இதுதான் நான் ‘கல்யாண வயசு’ பாடலில் இருந்து வெட்ட வேண்டிய ஒரே விஷயமாக இருந்தது. இல்லையென்றால் இப்போது உங்களுக்கு உள்ள அந்த ஆர்வம் இருந்திருக்காது. திரையரங்குகளுக்கு வந்து நயன்தாரா யோகிபாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
மேலும் இது எந்த மாதிரியான படம் என்பது குறித்து கூறிய நெல்சன், “கோலமாவு கோகிலாவில் நீங்கள் தீவிரத்தை, குடும்ப உறவுகளை உணரலாம். பழிவாங்கலில் சேர்ந்து கொள்வீர்கள், விழுந்து விழுந்து சிரிக்கும் தருணங்களில் அனுபவிப்பீர்கள், படம் உங்களை சீட்டின் நுனிக்கும் இழுத்து செல்லும்” என்று தெரிவித்தார்.
இத்துடன் கோலமாவு இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக படம் முழுவதும் வருகிறதாம்.
மொத்தத்தில் பலவிதமான டிவிஸ்டுகள் நிறைந்திருக்கும் இந்த ‘கோலமாவு கோகிலா’ யார்? என்பதை அறிந்துகொள்ள ஒட்டு மொத்த தமிழக சினிமா ரசிகர்களும் ஆவலோடு இருப்பதால், இப்படத்தின் ரிலீஸும் விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களைப் போல பெரிய அளவில் வெளியாகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்திருக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிர்மல் எடிட்டிங் செய்திருக்கிறார்.
நயந்தாராவுடன், விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா பொன்வன்னன், சிவாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.