உறக்கம் என்பது இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சங்களில் முக்கியமான ஒன்றாகும்.
நாம் தினமும் அதிக நேரம் உறங்கினாலும், உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன் உடலில் சோர்வு நிலை ஒன்றே காணப்படும்.
அப்படி என்றால் குறைவான உறக்கத்தை பற்றி சொல்லவா வேண்டும்?
போதுமான அளவு உறக்கம் இல்லாதோருக்கு அல்லது அதிகமாகத் உறங்குவோருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளளது.
அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த தகவலை கூறுகின்றனர்.
7 மணி நேரம் உறங்குவோர்க்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இரவில் 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் உறங்குபவர்களுக்கு இதயம் அவர்களின் வயதைவிட சுமார் 5 வயது மூப்படைந்துவிடும். மூப்படைந்தது போன்றே அவர்கள் செயல்படுவதாய் ஆய்வாளர்கள் கூறினர்.
போதுமான அளவு உறக்கம் இல்லாமல் போவதால் இதயம் மாத்திரமின்றி உடலின் சில செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
முக்கிய ஆபத்துக்கள் என்ன?
உயர் ரத்த அழுத்தம்
நீரிழிவு நோய்
உடல்பருமன்
போன்றவற்றுக்கும் உறக்க நேரத்திற்கும் தொடர்புகள் உண்டு என ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளது.