சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் விஜய் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மெர்சல் படம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது..
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 திகதிகளில் டுபாயில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் தென்னிந்திய திரைபட உலகமே குவியும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.
இந்த நிலையில் இந்த விருதுக்கு விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் மொத்தம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, சிறந்த படம்,
சிறந்த நடிகர்,
சிறந்த நடிகை,
சிறந்த வில்லன்,
சிறந்த இயக்குனர்,
சிறந்த இசையமைப்பாளர்,
சிறந்த பாடலாசிரியர்,
சிறந்த பாடகர்,
சிறந்த பாடகி,
சிறந்த நகைச்சுவை நடிகர்,
சிறந்த ஒளிப்பதிவாளர்
ஆகிய விருதுகளுக்கு ‘மெர்சல்’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இணையம ஊடாாக ரசிகர்கள் பதிவு செய்யும் வாக்குகளுக்கமைய விருது வழங்கப்படும்.