முதலைக்குடாவைச்சேர்ந்த இளம் குடும்பப்பெண் நுண்கடன் சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இலங்கையிலுள்ள நுண்கடன் நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியில் நிதியை குறைந்த வட்டியில் பெற்று வறிய மக்களிற்கு கிழமை லோண் எனும் பெயரில் அதிக வட்டிவீதத்துடன் வழங்கி அன்றாட கூலித்தொழிலாளிகளது பணங்களை சுரண்டி செல்கின்றனர்.
நாள் ஒன்றிற்கு சாதரணமா ஆயிரம் ரூபாயினை உழைக்கும் வறிய மக்கள் நான்கு, ஐந்து கிழமை லோண்களை பெற்றால் உழைக்கும் ஆயிரம் ரூபாயினை கொண்டு எப்படி லோணை செலுத்தமுடியும்?
கடன் பெறும் மக்கள் மத்தியிலும் தவறுள்ளது, கடன் வழங்கும் நிறுவனங்கள் பக்கமும் தவறுள்ளது. நிறுவனம் ஒன்று கடன் வழங்குகின்றது என்றால் அக் கடனை கொண்டு ஒரு சிறு தொழிலை செய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு கடனை கட்டுவதற்கான ஒழுங்குகளை மக்கள் செய்யவேண்டும்.
அதை விடுத்து ஒரு கடனை பெற்று மற்றக்கடனை கட்டினால் எங்கிருந்து வருமானம் வருவது கடனை கட்டுவதற்கு. அதுமட்டுமல்ல சில வறிய குடும்பங்கள் கடனை பெற்று வாடகை கொள்வனவின்மூலம் மோட்டார் சைக்கிளை பெறுகின்றார்கள் இச் சந்தற்பத்தில் அவர்களது வட்டிச்சுமை இரட்டிப்பாகின்றது. பெற்ற கடனையும் கட்டவேண்டும், கடன் எடுத்து வாடகைக்கொள்வனவில் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கும் தவணைப்பணம் கட்டவேண்டும்.
எடுத்த கடனை வருமானமீட்டும் வழியில் முதலீடு செய்யாமல் வாடகை கொள்வனவு தவணைப்பணம் மற்றும் கடன் தவணைப்பணம் கட்டுவதற்கு எங்கிருந்து வருமானம் வருவது? இதனால் பணம் கட்ட வருமானமின்றி மன உழைச்சலிற்கு உள்ளாகி இறுதியில் தற்கொலைக்கு முனைகிறார்கள்.
வறிய மக்களது தற்கொலைக்கு நுண்கடன் நிறுவனங்களும் காரணமாகின்றது என்பதை மறுக்க இயலாது. எங்கோ இருக்கும் முதலாளி ஏழை மக்களின் உழைப்பை வட்டியாக சுரண்டி சுகபோகம் அனுபவிப்பதற்காக இவ் நுண்கடன் நிறுவனங்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாது தமது வியாபார உச்சத்தை இலக்காக கொண்டு எண்ணிலடங்கா கடனை சாதாரண மக்களுக்கு வழங்குவது நியாயமா? ஒரு நாள் வருமானம் ஆயிரம் ரூபாய் பெறும் ஒரு குடும்பத்தால் ஒரு கிழமைக்கு ஐந்து அல்லது ஆறு கடன் தவணைப் பணத்தை எங்கிருந்து பெற்று கட்டுவது என்பது ஒரு கேள்விகுறியே.
இலங்கையிலுள்ள மூவின மக்களுள் தமிழ் இனமே இன்று நுண்கடன் பிரச்சனைக்குள் தள்ளப்பட்டுள்ளது. நுண்கடனை வழங்கி எமது மக்களை தற்கொலைக்கு தூண்டுவதும் ஒருவித #இன_அழிப்புத்தான்.
எனவே, சமூக நலன் விரும்பிகளாகிய முகநூல் போராளிகளது உறுதியான வேண்டுகோள் இதுதான். மக்களை கடன்சுமைக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டும் நுண்கடன்கள் இலங்கையிலுருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு, வறிய மக்களுக்கு நன்மை பயக்கும் கடன் உதவிகளை அரச நிறுவனங்களில் மேம்படுத்தவேண்டும்.