Loading...
பாஜக முன்னணி தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் பாரத பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 9 வாரங்களாக , அதாவது ஜூலை 11 ஆம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
அவரது உடல்நிலை நேற்று முதல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிர் காக்கும் உபகரணங்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று வாஜ்பாய் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
Loading...
இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைகள் பலனின்றி வாஜ்பாய் காலமானதாக மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
Loading...