உலக அழகி என்றதுமே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது நடிகை “ஐஸ்வர்யா ராய்” மட்டும் தான். 1997 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயங்கி “இருவர்” படத்தில் தொடங்கி இன்றுவரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் காலமாக சினிமாவில் ஒரு முன்னனி நடிகையாக நிலைத்து வருகிறார்.
1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய். இதுவரை தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார் . கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு பதுமையாக வலம்வந்து கொண்டு தான் இருக்கிறார்.
இன்னும் சில மாதங்களில் 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போதும் பல இளம் கதாநாயகிகள் பொறாமைபடும் அளவிற்கு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தனது உடலின் ரகசியத்தை பற்றி கூறியுள்ளார்.
நான் எனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ள ஒர்க்அவுட் எல்லாம் செய்வது இல்லை. இயற்கையாகவே என் உடல் இப்படி தான் உள்ளது. எனக்கு மெட்டபாலிசம் நல்லபடியாக உள்ளதால் எடை அதிகரிப்பது இல்லை. நான் சுறுசுறுப்பாக தான் இருப்பேன். தற்போது கொஞ்சம் யோகா செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.