17-08-2018 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் ஆவணி மாதம் முதலாம் நாள். வளர்பிறை சஷ்டி திதி காலை 6.30 வரை பிறகு சப்தமி. சுவாதி நட்சத்திரம் இரவு 9.54 வரை பிறகு விசாகம். யோகம்: சித்தயோகம்.
நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10.
எமகண்டம் மாலை மணி 3.00-4.30.
இராகு காலம் காலை மணி 10.30-12.00
குளிகை: 7:30 – 9:00.
சூலம்: மேற்கு.
பொது: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு, சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
பரிகாரம்: வெல்லம்.
மேஷம்:
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.
மிதுனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
கடகம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
கன்னி
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
துலாம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் பகைமை வந்து நீங்கும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
தனுசு
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மகரம்
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கும்பம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.
நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.
மீனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்குவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.