நாமக்கல் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் திடீரென காணாமல் போன காரணத்தால் மணமகள் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வினோத் (27) என்பவருக்கும், கரூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது,
அவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 17, 2018) காலை உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோயிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன.
திருமணம் முடிந்த பிறகு இன்று மாலை கிச்சிப்பாளையத்தில் உள்ள சிவா திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் மணமகன் வினோத் நேற்று மாலை அவசரமாக வெளியே எங்கேயே கிளம்பிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் வினோத் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து வினோத்தின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர், வினோத் மாயமானது குறித்து மணமகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் பிடிக்காமல் மணமகன் ஓடிவிட்டாரா? அல்லது வேறு பெண்ணை காதலித்து வந்ததால் ஓடிவிட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.