வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வருகை இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்கவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, பேட்டை மூன்று முறை மாற்றி பயிற்சி மேற்கொண்டார்.
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதால், அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் 2-ல் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
காயம் காரணமாக முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம் பெறாமல் இருந்தார்.
தற்போது இவர் மூன்றாவது டெஸ்ட் போட்டி தயாரிக்கவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கோஹ்லி, இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தோம். இதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே ஆப்சன் மட்டுமே உள்ளது.
பயந்தால் நாம் செய்ய வேண்டிய வேலை சரியாக நடக்காது. ஆடுகளத்தில் சரண்டர் ஆகி விடக்கூடாது என்பது வீரர்களிடையே வலியுறுத்தப்பட்டது.
தற்போது வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்துள்ளது இந்திய அணிக்கு ஒரு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று கூறியுள்ளார்