Loading...
இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க கடந்த 8 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நீக்கியுள்ளது. இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குழந்தைகளை தத்தெடுத்து வர தடை விதிக்கப்பட்டது.
Loading...
இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் சிறுவர்கள் நீதி சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் தத்தெடுத்தல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதனையடுத்து குழந்தைகள் தத்தெடுக்க மீண்டும் அனுமதிப்பது குறித்து இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தியதனையடுத்து குறித்த தடை நீக்கப்பட்டுள்ளது
Loading...