Loading...
மாசடைந்த சுற்றுச்சூழல், வெளி இடங்களில் டீசல் புகையை சுவாசிப்பது என்பது போன்ற பல காரணங்களினால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
குறிப்பாக புகைப்பிடிப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சரிசெய்தால் முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்.
Loading...
நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை இந்த அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
- தொடர்ச்சியாக தொண்டை வலியோ அல்லது உணவை விழுங்கும் போது வலி ஏற்படலாம், இதுதவிர உடல்வலி தொடர்ச்சியாக இருந்தாலும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்
- எலும்புகளில் புற்றுநோய் செல்கள் பரவுவதால் இது ஏற்படுகிறது, முதுகு, தோள்பட்டை, கைகள் மற்றும் கழுத்துகளில் அதிக வலி ஏற்படும், சிலருக்கு நுரையீரலை சுற்றி கூர்மையான வலி ஏற்படும்.
- மூச்சை உள்ளிழுக்கும் போதும், மூச்சை வெளியேற்றும் போதும் விசில் அடிப்பது போன்ற சத்தம் வரும், மூச்சுத்திணறல் காரணமாக கூட இவ்வாறு வரலாம்.
- இருமல் ஒரு வாரத்திற்கும் மேல் இருந்து, அதிக குளிரை உடைய குளிர்காலத்தில் ஏற்பட்டால் அது சில நேரங்களில் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாக அமைகிறது.
- தொடர்ந்து ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளும் நுரையீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது, புகைப்பிடிப்பவராக இருந்தால் சோர்வு, மன அழுத்தம், முழங்கால் வலி ஏற்படும்.
- நுரையீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறி குரல் வளம் பாதிப்படைவது, பொதுவாக நுரையீரல் கேன்சரால் நமது உடல் மற்றும் நரம்புகள் பாதிக்கும் போது ஏற்படுகிறது.
- நாம் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறி தான் உடல் எடை குறைவது, புற்றுநோய்க்கும் மிக முக்கியமான அறிகுறியும் இதுதான், புற்றுநோய் செல்கள் உடலில் உள்ள ஆற்றலை கட்டுப்படுத்துவதுடன் சத்துக்களை வெளியேற்றுவதால் எடை குறைகிறது.
Loading...