18.08.18 சனிக்கிழமை இன்றைய ராசி பலன்கள் விளம்பி வருடம், ஆவணி மாதம் 2ம் திகதி, துல்ஹஜ் 6ம் திகதி, 18.8.18 சனிக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி காலை 6:18 வரை; அதன்பின் அஷ்டமி திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 10:43 வரை; அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
பொது : சனீஸ்வரர் வழிபாடு, கரிநாள்.
மேஷம்:
செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்.
பணவரவு அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.
ரிஷபம்:
வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நற்பலன் தேடி வரும்.
தொழில், வியாபாரம் திருப்திகரமான அளவில் வளர்ச்சி பெறும். ஆதாயம் உயரும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்:
இடையூறு செய்பவரை விட்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும்.
பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் நல்லது. இயந்திரப்பிரிவு பணியாளர்கள் விழிப்புடன் பணியாற்றுவது அவசியம்.
கடகம்:
செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.
மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு வகைகளை தவிர்க்கவும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.
சிம்மம்:
சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயரும் சலுகையும் பெறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெற்று மகிழ்வர்.
கன்னி:
உறவினரிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.
திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். நேரத்திற்கு உண்பதால் உடல்நலனை பாதுகாக்கலாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
துலாம்:
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு.
வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் கலையம்சத்துடன் செயல்படுவர். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்:
கூடுதல் பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமார்.
பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும். பெண்களுக்கு தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.
தனுசு:
உறவினர், நண்பர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். லாபம் கூடும்.
சுபவிஷயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும்
மகரம்:
நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் இருந்த அதிருப்தி மறையும்.
தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் சேமிப்பாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.
கும்பம்:
உங்களின் நற்செயலை சிலர் குறைகூறி கூறலாம். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும்.
பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம்.வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மீனம்:
சிலர் சுயலாபம் பெற உங்களை புகழ்ந்து பேசுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம்.
லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.