கேரளாவில் வரலாறு காணாத மழையால் ஒட்டு மொத்த கேரள மாநிலமும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதுவரை 150-க்கும் அதிகமானோர் மழையால் உயிரிழந்துள்ளனர்.
பல ஆயிரம் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலன்களான கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, சூரியா, தனுஷ், சித்தார்த் மற்றும் பலர் நிதியுதவி அளித்துள்ளனர்.
ஆனால் தளபதி விஜய், அஜித் ஆகியோர் இதுவரை இதுபற்றி பேசவில்லை, நிதியுதவியும் அளித்ததாக தகவல் கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்துக்கு இணையாக கேரளாவில் ரசிகர்களை கொண்டிருக்கும் அஜித் விஜய் இதுவரை வாய் திறக்காதது ஏன் என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும் மற்ற தரப்பினர் பொதுவாகவே அஜித், விஜய் சத்தமில்லாமல் மக்களுக்கு உதவி வருபவர்கள். தற்போது அப்படி தான் நிச்சயம் உதவி இருப்பார்கள் என கூறி வருகின்றனர்.