இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடிக்கும் வாய்ப்பை இந்திய அணியின் தலைவர் கோஹ்லி நுலிழையில் தவறவிட்டார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கம்மில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சற்று முன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இதில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கோஹ்லி 97 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். இதனால் சதம் அடிக்கும் வாய்ப்பை கோஹ்லி தவறவிட்டார்.
அதுமட்டுமின்றி இப்போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பேட்ஜுடன் விளையாடி வருகின்றனர்.
அஜீத் வடேகரின் தலைமையில் தான் இந்திய அணி முதன்முறையாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிகளை 1971-ஆம் ஆண்டு வீழ்த்தி வெற்றி கண்டது.
வடேகரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் ஜெர்சியில் கருப்பு பேட்ச் அணிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.