சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அதனுள்ளே தண்டனை பெற்று வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். நீங்கள் டாக்குமெண்ட்ரி எடுக்கவோ, அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கவோ செல்கிறீர்கள் எனில், அவர்களை பக்காவாக எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எதெல்லாம் பேச வேண்டும், எதெல்லாம் பேசக் கூடாது என்று தயார்ப்படுத்தி வைத்திருப்பார்கள்.
எனவே, பொதுவாக சிறை கைதியின் அனுபவத்தை அவ்வளவு எளிதாக அறிந்துக் கொள்ள முடியாது. அதிலும், பெண் சிறை கைதிகளின் அனுபவமானது மிகவும் கொடியது.இவர்களை பாதுகாவலர்களே கூட தவறான விஷயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. வேறு வழியில்லை, கத்தினாலும், கூச்சலிட்டாலும் யாரும் உதவிக்கு வரப்போவதில்லை.
சிறையில் இருந்து தண்டனை முடித்து வெளியான உலகளாவிய பெண் கைதிகள் பல்வேறு ஊடகங்களில் தங்கள் சிறைசாலை அனுபவங்கள் பற்றி தெரிவித்த உண்மை வாக்கு மூலங்கள்… சீரான இடைவேளையில் எலக்ட்ரிக் ட்ரிம்மர்கள் தரப்படும். அது சுவரோட மாட்டி வைக்கப்பட்டிருக்கும். பெண் கைதிகள் வரிசையாக சென்று, குளியறையில் அதை பயன்படுத்தி முடியை ட்ரிம் செய்துக் கொள்ளலாம்.
ஆனால், சில பெண் கைதிகள் ட்ரிம்மரின் எதிர்முனையை பயன்படுத்தி அதை ஒரு அடல்ட் டாயாக பயன்படுத்திக் கொள்வார்கள். சிறையில் பெண்களுக்கு அதற்கான ஒரே தீர்வு பெண்கள் மட்டுமே, பெரும்பாலான பெண்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டாக வேண்டியது அவசியமாக அல்லது கட்டாயத்தால் நடக்கிறது. ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், கே என்று மட்டுமில்லாது, ஸ்ட்ரெயிட் உறவில் இருக்கும் பெண்களும் கூட வேறு வழியின்றி இத்தகைய உறவில் இணைந்துவிடுகிறார்கள்.
சிறையில் கொடுக்கப்படும் வேலைகளை சரியாக செய்யவில்லை என்றால், தண்டனை நிச்சயம் உண்டு. ஆனால், செய்த வேலைக்கான உணவு மட்டும் சரியாக கிடைக்காது. சிறையில் கைதிகள் அனுபவிக்கும் பெரிய கொடுமைகளில் முதன்மையானது உணவு தான். பெரும்பாலும் சிறை சாலை உணவு நன்றாக இருக்காது. நன்றாக இருக்காது என்பது ருசியை சார்ந்தது அல்ல, தரமற்றது என்பதை தாண்டி, உணவில் புழுக்கள் கூட சில சமயம் கிடைக்கும்.
சிலர் திறமையானவர்களும் கூட… கையில் கிடைக்கும் பொருளை வைத்து ஏதாவது உருவாக்குவார்கள். கைவினை பொருள் போலவோ, அலங்கார பொருள் போலவோ வடிவமைப்பார்கள். சிலர் தங்களுக்கு தேவையானதை உருவாக்கி கொள்வார்கள். இதில், அடல்ட் கருவிகளை உருவாக்கி பயன்படுத்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
கிட்சன், வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் சிறுசிறு பொருட்களை வைத்து இவர்கள் தங்களுக்கு தேவையானதை தயார் செய்துக் கொள்வார்கள். சில பாதுகாவலர்கள் தளர்வாக நடந்துக் கொள்வார்கள். சிலர் மிகவும் கடுமையாக நடந்துக் கொள்வார்கள். எவர் எப்படியாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அச்சத்தின் உச்சக்கட்டமாக தான் நகரும். சிலர் பாதுகாவலர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவார்கள். அடித்து, உதைத்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிவிடுவார்கள்.
இத்தகைய வாக்கு மூலங்களை மூன்று மாதங்களில் இருந்து பத்து வருடங்கள் வரை தண்டனை பெற்ற பெண் சிறை கைதிகள் பலரும் கூறியுள்ளனர். ஆண்கள் சிறையில் மட்டும் தான் அடித்துக் கொள்வார்கள் என்று நினைக்காதீர்கள். பெண் சிறையிலும் சண்டைகள் நடக்கும் என்கிறார் ஒருவர். ஒருமுறை டாக்குமென்ட்ரிக்காக படம்பிடிக்க்க சென்றவர்களிடம், மேகன் என்ற சிறை கைதி, தான் ஒரு பெண் கைதியை அடித்து, மூக்கை உடைத்த கதையை கூறி அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.
மூக்கை உடைத்து, விரலை உடைத்து, வாயை கிழித்தேன் என்று எதுகை, மோனையாக பேசி அச்சத்தில் ஆழ செய்திருக்கிறார் அந்த பெண் கைதி. சிறையில் போதை பொருள் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். அது கிடைக்காதவர்கள் வேறு சில பொருட்களை போதையாக பயன்படுத்திக் கொள்வார்கள் உதாரணமாக காபி தூளை மூக்கு வழியாக உறுஞ்சி அதன் மூலம் போதை ஏற்றிக் கொள்பவர்களும் இருக்கிறார்களாம். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது மட்டும் தண்டனை அல்ல. உண்மையான தண்டனை சுகாதாரமின்மை தான்.
அங்கே எனக்கு இந்த வசதி, வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. சிறை அறையில் தேவை இருப்பதை விட, தேவை இல்லாதவை தான் அதிகம் வரும். பூச்சிகள், பேன். பொடுகு, அரிப்பு தொல்லை என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இது யாரோ ஒருவருக்கு மட்டுமல்ல, சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.
சிறையில் இருப்பதிலேயே பெரிய தண்டனை தனிமை தான். சிலரை தனி அறையில் தான் அடைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரம் தவிர வெளியே எங்கேயும் செல்ல முடியாது. தங்களுக்கு பிடித்தவர் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலுமே கூட ஓரிரு நாளில் அந்த இனிய நினைவுகளும் கூட ரணமாக மாறிவிடும், அவர்களை எல்லாம் பிரிந்து இப்படி சிறைப்பட்டு கிடைக்ககிறோமே என்ற ஆதங்கம் தான் மீதமிருக்கும். சிறையில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள்.
சிலர் சிறையில் இருந்தாலுமே கூட தினந்தோறும் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். சிலர் சுகாதாரமே இல்லாமல் நடந்துக் கொள்வார்கள். சிறையில் நான் இந்த அறையில், இவருடன் தான் இருப்பேன் என்றெல்லாம் அடம்பிடிக்க முடியாது. பல சமயங்களில் உடன் இருக்கும் சிறைவாசி மூலமாகவே பல பிரச்சனைகள் உண்டாகும். ஒருமுறை சிறையில் நீர் பற்றாகுறை. வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே குளிக்க முடியும். அதிலும், ஒருவர் இவ்வளவு தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு.
உள்ளே குளிக்கும் போது நீர் பயன்பாட்டை கண்காணிக்க ஒரு பெண் அதிகாரி இருப்பார். அவர் முன் குளிப்பதே கடினம், அதிலும், அவரது கோபப் பார்வையில் அந்த சிறிதளவு நீரில் குளித்து முடித்துவிட்டு வருவதற்குள் உயிர் போய்விடும். கொஞ்சம் தண்ணி அதிகமாக பயன்படுத்தினாலும் வார்த்தைகளும், தடிகளும் வலுவாக தாக்கும். பெண் சிறை கைதிகளும், பெண்களுடனேயே அந்த உறவில் இணைந்திருப்பார்கள் தான். ஆனால், இது மிகவும் எளிதானது அல்ல. அதே போல நினைக்கும் போதெல்லாம் இந்த உறவில் இணைய முடியாது.
அடிக்கடி இப்படியான உறவில் இணைவதை யாரேனும் அறிந்தாலோ, அல்லது இப்படியான உறவில் இணைந்து மாட்டிக் கொண்டாலோ, அதற்கான தண்டனை தீவிரமானதாக இருக்கும். அதே போல இந்த உறவில் நினைத்தபடி எல்லாம் இணைய முடியாது, கிடைக்கும் குறுகிய காலக்கட்டத்திற்குள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாவலர்களிடம் மாட்டிக் கொண்டால் வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனைக்கு ஆளாகக் கூடும்.
சிறை வாழ்க்கை குறித்து பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உன்மை வாக்கு மூலங்கள்!இருப்பதிலேயே பெரிய அபாயம் என்னவெனில், எப்போது எந்த சிறை கைதி சைக்கோ போல நடந்துக் கொள்வார் என்பது தான். தனிமை, விரக்தி, கோபம், இயலாமை என பல காரணங்களால் திடீரென அவர்களுக்கு தெரியாமல் காட்டுமிராண்டி போல நடந்துக் கொள்வார்கள். இதனால் மற்ற சிறை கைதிகளும் பாதிக்கப்படுவார்கள்.