வாஜ்பாயின் திருமணம் செய்ய பயந்து தலைமறைவானது குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இருந்து தேர்வான முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் வாஜ்பாய். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்துள்ளார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலமானார்.
தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக திருமணம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக அவர், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுக்குறித்து சுவையான தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது, வாஜ்பாய்க்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முயன்றபோது அவர் அதனைத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதால், திருமணத்தைத் தவிர்க்க தனது நண்பர் கோரே லால் திரிபாதி என்பவரின் வீட்டில் உள்ள தனி அறையில் 3 நாட்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார். தனக்கு பசிக்கும்போது மட்டும் கதவைத் தட்டி உணவு வாங்கிக் சாப்பிட்டுள்ளார்.
மறைந்த கோரே லால் திரிபாதி மகன் விஜய் பிரகாஷ், வாஜ்பாய் காலமானதை முன்னிட்டு அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது, திருமணத்தைத் தவிர்ப்பதற்காக தங்கள் வீட்டில் வாஜ்பாய் ஒளிந்து கொண்டது பற்றி பற்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், கேட்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.