மூன்றாவது டெஸ்டில் 3 ஓட்டங்கள் அடிக்க முடியாமல் ரசீத் சுழலில் கோஹ்லி வீழ்ந்ததால், இங்கிலாந்து வீரர்கள் துள்ளிக் குதித்தனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன் படி முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்…
இதில் கோஹ்லி அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 97 ஓட்டங்கள் எடுத்த போது அடில் ரசீத் சுழலில் பென்ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
3 ஓட்டங்களில் சதம் அடிக்கமுடியாமல் கோஹ்லி கத்திய நிலையில் வெளியேற, அதே சமயம் இங்கிலாந்து வீரர்கள் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியதால், துள்ளிக்குதித்தனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்