பிரியங்காவுக்கு பொருத்தமான ஆள் நிக் ஜோனஸ் என்று பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்தது. மும்பையில் நேற்று நிச்சயதார்த்த கொண்டாட்டம் பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
Buy Tickets பீச் பங்களாவில் பாரம்பரிய ரோக்கா நிகழ்வில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் நடிகை ஆலியாபட், சல்மான்கானின் சகோதரி அர்பிதா கான், இயக்குனர் விஷால் பரத்வாஜ், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர், மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் முக்கிய அங்கம் வகித்த பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ரா, நிக் ஜோனஸ் தான் பிரியங்காவுக்கு சரியான ஆள் என தெரிவித்துள்ளார். நாம் சிறுபிள்ளைகளாக இருந்தபோது ஜாலியாக விளையாண்டோம்,
வெட்கப்பட்டுக்கொண்டே கணவருக்கு தேனீர் கொடுப்போம் என நினைத்தோம். காதல் என்ற மேஜிக் மீது நம்பிக்கைக் கொண்டிருந்த நம்பிக்கையினால் ஒருநாள் சரியான நபரை தேர்தெடுப்போம் என நம்பினோம். இன்று அது நடந்திருக்கிறது. நிக் ஜோனஸை தவிர பிரியங்காவிற்கு வேறு யாரும் பொருத்தமானவராக இருக்க முடியாது என நினைக்கிறேன். ஒரு மனிதரைப் பற்றி முடிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவருடன் பயணிப்பது, மற்றொன்று அவருடன் சாப்பிடுவது. நிக் இந்த இரண்டையுமே நான் உங்களுடன் செய்திருக்கிறேன். அதனால் சொல்கிறேன் நீங்கள் என் அக்காவுக்கு மிகப்பொருத்தமானவர் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.