வரலாறு காணாத அளவிற்கு வெள்ளத்தினால் கேரளாவில் ஏற்பட்ட சேதத்துக்கு நடிகர் – நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் என அனைவரும் மனமுவந்து நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்த பாதிப்பில் இருந்து கேரளா மீண்டு வரவே பல மாதங்கள் ஆகும், ஏனெனில் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் வந்துள்ளது.
மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி நடிகர்களும் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், பாலிவுட் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் ரூ 5 கோடியை கேரளா நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், டைரக்டர் ஷங்கர் ரூ.10 லட்சம் உதவி தொகையை, ”ஆன் லைன்” மூலம் நேற்று அனுப்பி வைத்தார். நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். பிரபாஸ், விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட வளரும் நடிகர்களே பெரிய அளவில் பணம் வழங்கியுள்ளனர்.
மேலும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினி, ரூ.15 லட்சம் வழங்கியிருப்பதை விமர்சித்து சமூகவலைதளங்களில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், ஷாருக்கான் தான் ரியல் ஹீரோ என மக்கள் அனைவரும் ஷாருக்கானை பாராட்டி வருகின்றனர்.