கடந்த இரு மாதங்களிற்கு மேலாக பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” வீட்டில் இருந்து நேற்று எதிர்பார்த்தது போலவே வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார். தற்போது வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை ஒன்பது மட்டுமே உள்ளது.Bigg Boss 2 20th August 2018 Promo video released
இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 60 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் இனிமேல் வைல்ட்கார்ட் எண்ட்ரி இருக்குமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இந் நிலையில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராஸஸ் குறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த முறை ஜோடி ஜோடியாக சேர்ந்து நாமினேஷன் செய்கின்றனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யாவை மும்தாஜ் நாமினேஷன் செய்கிறார். ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் 12 வயது சிறுமி போல் இருப்பதாகவும் அவருக்கு மெச்சூரிட்டி இல்லாததாலும் நாமினேட் செய்வதாக கூறுகிறார்.
அதனைப்போல் ஐஸ்வர்யாவும், மும்தாஜ் 2 வயது குழந்தை போல் இருப்பதாகக் கூறி அவரை நாமினேட் செய்வதாகவும் கூறுகின்றார்.
மேலும் மகத், செண்ட்ராயன், டேனியல் ஆகியோர்களும் மும்தாஜை நாமினேட் செய்வது போல் தெரிகிறது. எனவே இந்த வார நாமினேஷனில் மும்தாஜ் உறுதி என்பது தெரிகிறது.
எனினும், பார்வையாளர்கள் ஐஸ்வர்யா மீது செம கோபத்தில் இருப்பதால் அவர் நாமினேட் ஆனால் வெளியேறுவது நிச்சயம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.