உலகின் சிறந்த பெண் கலைஞர்களில் நம்பர் ஒன்னாக இருக்கும் பிரபல பாப் பாடகி மடோனா, தனது 60 ஆவது பிறந்தநாளை மற்றவர்களுக்கு நினைவூட்டும் வகையில் பல்வேறு விதமான பதிவுகளைப் பகிர்ந்து கொண்டாடியுள்ளார்
அதாவது, ஹாலிவுட் பாப் பாடகர் மடோனா லூயிஸ் சிக்கோனே (60) அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாகணாத்தில் பே நகரில் 1958 ஆகஸ்ட் 16 ஆம் திகதி பிறந்தார்.
மிகச் சிறுவயதிலேயே இசைப் பயணத்தை தொடங்கிய மடோனா பாடிய பாடல்களின் ஆல்பம்கள் இதுவரை 300 மில்லியனுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று உலகம் போற்றும் இசை பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கும் மடோனா கடந்த 16ஆம் திகதி தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதையடுத்து பிறந்தநாளை அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போஸ்டுகளை பகிர்ந்துள்ளார். இதில் அன்றைய நாள் காலை எழுந்தது முதல் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்தையும் புகைப்படமாக பகிர்ந்துள்ளார். பிறந்தநாளை ”பெர்பெர்” கலச்சார முறையில் கொண்டாடியதாக தெரிவித்துள்ளார்.
அதிலும் முக்கியமாக ஒரு பதிவில், ”தி குயின்” என்று எழுதப்பட்ட சீட்டை பிடித்தவாறு போஸ் கொடுத்துள்ளார். இதில் ”யாராவது ஒரு வேளை மறந்திருந்தால்” என்று பதிவிட்டு பிறந்தநாள் என்ற ஹேஸ்டாக்கையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், பொதுவாக பிரபலங்கள் தங்களது பிறந்தநாளை பெரிதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கொண்டாடுவார்கள். ஆனால் மடோனா தனது பிறந்தநாளை மற்றவர்களுக்கு நினைவூட்டும் விதமாக பதிவுகளை பகிர்ந்திருப்பது, ”நான் இன்றும் ராணி தான் மறந்துவிடாதீர்கள்” என்று அனைவருக்கும் ஒரு முறை நினைவூட்டும் வகையில் இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, ரசிகர்கள் பலர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டித்தான் இப்படியெல்லாம் கெஞ்சியுள்ளார் மடோனா என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர்.