கேளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு நிவாரணம் கொடுக்கும் வைகயில் தமக்காக சேர்த்து வைத்த பணம் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை தமிழ் நாட்டைச் சேர்ந்த சிறார்கள் சிலர் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழ் நாட்டு சிறுவர்களின் வியப்பூட்டும் இந்த காணொளி சமூக வலைளத்தளங்களில் வைரலாகப் பரவி அனைவரின் மனதை நெகிழச் செய்துள்ளது.
தம்மைப் போன்று கேரளா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அனைவரும் வழங்குமாறும் இந்தச் சிறுவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், கேரளா மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ள இந்த தமிழ் நாட்டுச் சிறுவர்கள், அவர்களுக்காக பிரார்த்தித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்த மழையால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
மண்சரிவும் ஏற்பட்டு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 300 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.