இங்கிலாந்து நாட்டிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து நீண்ட கிரிக்கெட் தொடர் ஒன்றை விளையாடி வருகின்றது.
இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஆரம்பித்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. இந்திய பந்துவீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தினறிய இங்கிலாந்து அணஜ 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
புஜாரே 33 ரன்களுடனும், கோஹ்லி 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி தற்போது 292 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனால் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.