கரும்புள்ளிகளை நீக்குவதற்காக வீட்டு குறிப்புகள்
கரும்புள்ளிகள் பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சி கொடுப்பதோடு, அதனை வெளியே எடுக்கும் போது கடுமையை வலியை ஏற்படுத்திவிடும்.
இறந்த சருமம் மற்றும் எண்ணை சமருத்தில் அடைந்து விடும். அது கருப்பு புள்ளிகளை ஏற்படுத்தும். காற்றுபட்டவுடன் வீக்கம் ஏற்படும்.
முகம் அல்லது மூக்கு பட்டைகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இயற்கையாகவும், வலி இல்லாமலும் அவற்றை நீக்கிவிடலாம்.
இங்கே கரும்புள்ளிகளை நீக்குவதற்கு ஐந்து உறுதி செய்யப்பட்ட தீ வீட்டு வைத்தியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பேக்கிங் சோடா
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்குவதற்கு, பேக்கிங் சோடா பயன்படுத்த முடியும். கடுமையான புள்ளிகளுக்கு எதிராக சண்டையிட்டு சருமத்தை பாதுகாப்பதற்கு பேக்கிங் சோடா உதவும். ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் பூச வேண்டும். இதனை பூசி 15-20 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பேக்கிங் சோடா இயற்கை தன்மையை கொணட ஒன்றாகும். அது கிருமிகளை எதிர்த்து போராடி கரும்புள்ளிகளை நீக்குவதற்கு உதவி செய்யும்.
கிரீன்டீ
கரும்புள்ளிகளுக்கு எதிர்த்து போராடும் ஒரு பொருளாக கிரீன்டீ வலியுறுத்தப்பட்டுள்ளது. முகத்தில் பயன்படுத்தப்படும் போது, அது ஆன்டிஆக்சிடென்ட்கள் அசுத்தங்கள் மற்றும் தெளிவாக கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. கீரின் டீயை நீரில் கலந்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும். அதனை முகத்தில் பூசி 15-20 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
முட்டை வெள்ளைக்கரு
முட்டை வெள்ளைக்கரு எளிதானது மற்றும் பயனுள்ளது. முட்டை வெள்ளைக்கருவில் தேன் கலந்து கொள்ள வேண்டும். அதனை முகத்தில் பூசி முழுமையாக காயவிட வேண்டும். காய்ந்த பின்னர் முகத்தை கழுவ வேண்டும். அப்படி செய்தால் கரும்புள்ளியற்ற முகத்தை பெறலாம். முட்டை எப்படி இதனை நீக்கும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. முட்டையின் வெள்ளை கரு துளைகள் இறுக்குவதில் உதவுகிறது, இதன் மூலம் கரும்புள்ளிகள் நீங்க உதவும்.
தக்காளி
தக்காளி ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இது கரும்புள்ளிகளுக்கு தீர்வாகும். உறங்குவதற்கு முன்னர் வெறும் தக்காளியை முகத்தில் பூசிவிட்டு, அடுத்த நாள் காலை முகத்தை கழுவ வேண்டும். தக்காளி கிருமி எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. இதன் மூலம் கரும்புள்ளி நீங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலவங்கப்பட்டை தூள்
கரும்புள்ளி நீங்குவதற்கு முக்கிய பொருளாக இலவங்கப்பட்டை தூள் உள்ளது. இலவங்கப்பட்டை தூளை, எலுமிச்சை சாறுடன் கலந்து கொள்ள வேண்டும். விரும்பினால் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி 10-15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனை சாதாரண நீரில் கழுவ வேண்டும். இலவங்கப்பட்டை தூள் இறுக்கமடைய உதவும் மற்றும் அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறு முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் ஆகியவற்றை எதிர்த்து போராட உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.