சிறுவர்கள் முதல் பெரியோர் வரை படம் பார்க்கத் திரையரங்கிற்குச் செல்லும்போது அல்லது வீட்டில் இருந்தவாறு பார்க்கும்போதோ பாப் கோர்ன் எனப்படும் சோள பொறி சாப்பிடுவது பொதுவான ஒரு விடயமாகும்.
எனினும் இவ்வாறு சாப்பிடும் சோள பொறி ஆபத்தானதாக அல்லது ஆரோக்கியமானதா என நாம் யோசிப்பதில்லை.
ஒரு அளவின்றி எடுத்து கொள்ளும் சோள பொறி ஆரோக்கியமானதா?
சோளங்கள் முதலில் வெப்பத்தால் வெடித்து சோள பொறியாகும்.
அதில் உப்பு சேர்க்கப்படும்.
பின்னர் சற்று சர்க்கரை மற்றும் காரம் சேர்க்கப்படம்.
இந்த அனைத்து பொருட்களும் சேர்ந்தால் முழுமையான பாப் கோர்ன் தயாராகும்.
இதனை நாம் சுவைத்து உண்கிறோம்.
எனினும் உப்பு, சர்க்கரை மற்றும் காரம் உடலில் அதிகமாக சேர்ந்தால்,
அவை உடலுக்கு தீங்குகளை ஏற்படுத்தும்.
உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.
உப்பு, சர்க்கரை மற்றும் காரம் சேர்க்காத பாப் கோர்ன்கள் ஆரோக்கியமானதாகும்.
உப்பு, சர்க்கரை மற்றும் காரம் சேர்க்காத பாப் கோர்ன்கள் உள்ள நன்மைகள்?
குறைந்த கொழுப்பை கொண்டிருக்கும்.
அதிக நார்ச்சத்தை கொண்டிருக்கும்.
நொறுக்குத் தீனிக்குத் தகுந்த உணவாக இருக்கும்.
பாப் கோர்னில் தவிக்கப்பட வேண்டியவைகள்?
வெண்ணெய்
உப்பு
சர்க்கரை
காரம்
பாப் கோர்ன் எப்படி சாப்பிடலாம்?
மேல் குறிப்பிட்ட 4 பொருட்களையும் சேர்க்காமல், 25 கிராமிலிருந்து 30 கிராம் அளவிலான சோளப்பொறிகளைச் சாப்பிடலாம்.
அது ஆரோக்கியமானது என ஆய்வுகள் கூறுகின்றன.
எப்படியிருப்பினும் தினமும் சோள பொறிகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் சிறந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.