இளம்பெண்ணை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரை மொரவெவ காவல்துறை நேற்று கைது செய்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமியின் தாய் சிறையில் இருப்பதால் குறித்த இளம்பெண் பெண் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அந்த சமயத்தில், உறவினர் ஒருவரின் மகனால் இளம்பெண் பலமுறை பாலியல் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளம்பெண்ணுக்கும், சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு காணப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருந்த போதிலும், குறித்த நபரால் தான் மூன்று மாதங்களாக பாலியல் சித்திரவதை செய்யப்பட்டதாக சமீபத்தில் பெண் உறவினரிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த இளம்பெண் கர்ப்பம் தரித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தற்போது பெண் உறவினருடன், காவல் நிலையம் சென்று குறித்த இளம்பெண் புகார் செய்துள்ளார்.
அவரின் புகாரைப் பெற்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சிறையில் இருந்த அந்த இளம்பெண்ணின் தாய் தற்போது விடுதலையாகியுள்ளதாக மொரவெவ காவல்துறை குறிப்பிட்டுள்ளது.