Loading...
கலென்பிதுனுவெவ, திவுல்வெவ பகுதியில் நீராட சென்ற 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து குறித்த சிறுவனை மீட்டு கலென்பிதுனுவெவ வைத்தியசாலையில் அனுமதித்த போதும், குறித்த சிறுவன் அந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
கலென்பிதுனுவெவ, கெடலாவ பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த கண்டி பொக்கவலப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலத்தில் பல காயங்கள் காணப்பட்டதால் இறப்புத் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Loading...