யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் கடந்த தினம் வைத்தியர் ஒருவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண தலைமையக காவற்துறைத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த தினம் இடம்பெற்ற இந்த தாக்குதலானது, வாள்வெட்டு சந்தேக நபர் ஒருவரை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளது.
எனினும், அவரது வீட்டுக்கு பதிலாக குறித்த வைத்தியரின் வீடு தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொக்குவில் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் கைதான ஒருவரை இலக்கு வைத்தே அவர்கள் தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலானது, ஆவா என்ற சட்டவிரோத குழுவிற்கும் அதற்கு எதிரான குழுக்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல்களின் அடிப்படையில் இடம்பெற்றிருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.