கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை மீட்டெடுக்க தேவையான பணிகள் அம்மாநில அரசு சார்பில் வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதே சமயம், கேரள மக்களுக்கு உலகமுழுவதுமுள்ள மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.
அந்த வகையில், கேரள மக்களுக்காக நான்கு ஆண்டுகளாக சைக்கிள் வாங்குவதற்காக தான் உண்டியல் மூலம் பெற்றோர்கள் அவ்வப்போது கொடுத்த பணத்தை ஆசை, ஆசையாக சேர்த்து வைத்திருந்த சிறுமி மழை ; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவின் மீட்பு பணிகளுக்காக அளித்து நெகிழ்ச்சியூட்டியிருந்தார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி அனுப்பிரியா.
அனுப்பிரியாவின் இந்த செயலை பாராட்டி அவருக்கு ஆண்டுதோறும் ஒரு சைக்கிள் பரிசாக அழிக்கப்படுமென அறிவித்திருந்தது ஹீரோ நிறுவனம். அதேபோல், நேற்றைய தினம் சிறுமிக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், ரூ.9000 ரொக்கமாக ஹீரோ நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட போது அதனை வாங்க மறுத்தசிறுமியின் தந்தை குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தினை கற்றுக்கொடுக்கும்படி ஏனைய பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.