Loading...
ஜாகர்த்தா
ஜாகர்த்தாவில் நடைபெறும் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய விரரான சௌரப் சௌத்ரி தங்கப்பதக்கமும் அபிஷேக் வர்மா வெண்கல பதக்கமும் வென்றனர்.
இந்தோனேசியா நாட்டின் ஜாகர்தா நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 ல் இன்று ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. இதில் கலந்துக் கொண்ட இந்திய வீரர்கள் பல புதிய சாதனைகளை புரிந்தனர்.
Loading...
இந்திய துப்பாக்கி சுடும் வீரரான சௌரப் சௌத்ரி 240.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இவர் 16 வயதே ஆன இளைஞர் ஆவார் மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா 219.3 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு 18 வயது ஆகிறது.
இதுவரை தங்கம் வென்ற போட்டியாளர்களில் சௌரப் வயதில் மிகவும் சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...