Loading...
வெயில் காலத்தில் உடல் வெப்பத்தினை தணிக்க, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து பராமரிக்கப்படும்.
- வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். எனவே, இதனை பொடி செய்து நீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
- வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இதய நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும். மேலும் இது கொலஸ்ட்ரால் அளவையும் குறைப்பதனால் இதய பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இல்லை.
Loading...
- நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, அதில் உள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியை தூண்டும்.
- வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இதனால் வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
- வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச் சத்துக்கள் ஆகியவை செரிமான பிரச்சனையை சரிசெய்யும். வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வர வேண்டும்.
- இதன்மூலம், செரிமான பிரச்சனைகள் மற்றும் அல்சர் ஆகியவை நீங்கும்.
- வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்கும். அத்துடன் நீண்ட நேரம் பசி எடுக்காத உணர்வை தரும்.
- வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும். இதன்மூலம் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
- வெந்தயம் கல்லீரலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் ரத்தத்தை சீராக பாய உதவும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் மேம்படும்.
Loading...