கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழர்களை சிலர் கிண்டல் செய்வதோடு, அவர்களுக்கு எதிராக விஷமத்தனமான கருத்துக்களை பகிர்வதாக அம்மாநில எம்.பி ராஜேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
கேரளா வெள்ளத்திற்கு தமிழர்கள் பெரிய அளவில் உதவி செய்தனர். கேரளாவில் வெள்ளம் என்று தெரிந்தவுடன் உதவி செய்ய தமிழர்கள் வேகமாக களமிறங்கினார்கள்.
கேரளாவிற்கு சென்ற உதவி வாகனங்களில் அதிகமானது தமிழ்நாட்டில் இருந்து சென்றதுதான் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரளா எம்பி ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில், தினமும் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கில் போன் வந்து கொண்டே இருக்கிறது. வெள்ளம் என்று தெரிந்தவுடன் அதிக மக்கள் உதவி செய்ய களமிறங்கி வந்தனர்.
தமிழர்களுக்கு எதிராக இங்கே சிலர் விஷமத்தனமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். உதவி செய்பவர்களை கூட அவர்கள் அப்படித் தான் கிண்டல் செய்கிறார்கள். தமிழர்கள் இப்போது செய்யும் உதவியை நாங்கள் மறக்க மாட்டோம் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.