மத்திய பிரதேசத்தில் காமுகர்களால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் சத்தம் கேட்டு, அவரது வளர்ப்பு நாய் விரைந்து சென்று காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் அருகே உள்ள கரிலா என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமையன்று கொசுவை விரட்டுவதற்காக வைக்கோல் தேடி 14 வயது சிறுமி வெளியில் சென்றுள்ளார்.
சிறுமி தனியாக செல்வதை பார்த்த ஐஷு அஹிர்வார் (39), புனித் அஹிர்வார் (24) என்ற இரு இளைஞர்கள் கத்தி முனையில் சிறுமியை மிரட்டி, அருகாமையில் இருந்த குடிசைக்குள் வைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளனர். இதனையடுத்து உதவி கோரி சிறுமி கத்தியுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு உடனடியாக குடிசை பகுதிக்கு ஓடிய அவரது வளர்ப்பு நாய், ஐஷுவை கடித்துள்ளது. பதிலுக்கு அவனும் கத்தியை கொண்டு நாயை தாக்க முற்பட்டுள்ளான்.
இதற்கிடையில் குடிசையிலிருந்து சிறுமி வெளியேறி தப்பி ஓடினார். ஆனால் தொடர்ச்சியாக அரக்கர்களுடன் சண்டையிட்டவரே, குரைத்துக் கொண்டிருந்ததால் நாயின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்து சம்மந்தப்பட்ட இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் நடந்தவை பற்றி சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்