கேரள மக்களுக்கு வெள்ளத்தில் சிக்கி இப்போது தான் கொஞ்சம் சாதாரண நிலைக்கு திரும்புகிறார்கள். வீடு முழுவதும் இழந்து இருக்கும் மக்களுக்கு பலர் பொருட்கள் கொடுத்து உதவி வருகிறது.
சிலர் கேரள அரசின் பெயரில் நிதிகளையும் அனுப்பி வைக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து அண்மையில் சென்னை வந்த விஜயகாந்த் மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார். அடுத்தபடியாக கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்காக ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்களை அனுப்பி வைத்துள்ளாராம். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் தேமுதிக சார்பில் வழங்கப்படும்.
கேரளாவிற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்#KeralaFloodRelief pic.twitter.com/uEiuMF2wky
— Vijayakant (@iVijayakant) August 20, 2018